தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு! - madurai collector

மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

By

Published : Jun 1, 2022, 12:09 PM IST

மதுரை: மாநகராட்சி தூய்மை மற்றும் பொறியியல் பிரிவு உள்ளிட்ட பணியாளர்கள் 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது.

மதுரை மாநகராட்சியில் தற்காலிகமாக பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த தொழில் சங்க பிரதிநிதிகள் மாநகராட்சி ஆணையருடன் இரண்டு வாரத்துக்குள் உள்ளாட்சித்துறை அமைச்சரை சந்திக்கவும், கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வழங்கப்பட்டவுள்ளது.

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மாநகராட்சி பணியாளர்களுக்கு நடப்பு ஆண்டு இறுதிக்குள் படிப்படியாக கரோனா ஊக்கத்தொகை வழங்கப்படும். 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளின் படி விடுபட்ட பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படும், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய பணியாளர்களுக்கு நகராட்சி குறைந்தபட்ச ஊதியத்தை இரண்டு மாதங்களில் நிர்ணயம் செய்யவுள்ளது, பணியாளர் பிரச்சினைகளை பேசி தீர்க்க சிறப்பு குழு அமைக்கப்படும்.

இக்கோரிக்கைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததையடுத்து போராட்டக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். தொடர்ந்து, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது, மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் 8 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் நடைபெற்ற 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது, மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை நிறைவேற்றுவது தொடர்பாக எழுத்துப் பூர்வமாக உத்திரவாதம் அளித்தது.

ஆகையால் மக்களின் நலன் கருதி போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் பணிக்கு செல்வார்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற ஒவ்வொரு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு நன்றி எனக் கூறினார்.

இதையும் படிங்க: மதுரை - தேனி ரயிலின் கால அட்டவணையில் மாற்றம்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details