தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு - மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மதுரை மாநகராட்சியின் 100 வார்டு உறுப்பினர்களுக்கு மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு
மதுரை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு

By

Published : Mar 2, 2022, 1:36 PM IST

மதுரை:தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மதுரை மாநகராட்சியில் 100 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடைபெற்றது.

இதில், திமுக 67 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், சிபிஎம் 4 இடங்களிலும், மதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதிமுக 15 இடங்களிலும், விசிக, பாஜக தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

மதுரை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு

இன்று (மார்ச்.2) மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளான மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. மதுரை மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ஆணையர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உறுப்பினர்கள் உறுதிமொழி கூறி பதவியேற்றுக் கொண்டனர்.

உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் 'உளமாற' 'கடவுளறிய' என்று கூறி பதவியேற்றனர். திமுகவைச் சேர்ந்த சிலர் அக்கட்சியின் தலைவர் மறைந்த கருணாநிதியின் பெயரைச் சொல்லி பதவியேற்றுக் கொண்டனர்.

இதையும் படிங்க: ஸ்டாலினின் நல்லாட்சிக்கு அடித்தளம் அண்ணாவின் கனிவே, கலைஞரின் துணிவே: திமுக சிறப்புப் பட்டிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details