தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிமுறையை கடைபிடிக்காத வியாபார கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்! - விதிமுறையை கடைபிடிக்காத வியாபார கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

மதுரை : கீழ மாசி வீதி மொத்த வியாபார கடைகளில், விதிமுறைகளை கடைபிடிக்காமல் கடைகளைத் திறக்கக் கூடாது என மாநகராட்சி சார்பில் எச்சரித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மதுரை செய்திகள்  மதுரை மாநகராட்சி நடவடிக்கை  மதுரை 144 தடை உத்தரவு  விதிமுறையை கடைபிடிக்காத வியாபார கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்  madurai corporation notice to traders
விதிமுறையை கடைபிடிக்காத வியாபார கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

By

Published : Mar 31, 2020, 7:14 PM IST

மதுரை சிம்மக்கல், கீழமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் பலசரக்கு கடைகள், காய்கறிக்கடைகள் அதிகம் உள்ளன. இங்குள்ள கடைகளில் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சிறு வியாபாரிகள் வந்து பொருள்களை வாங்கிச் செல்வர். தற்போது ஊரடங்கு உத்தரவை ஓட்டி குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அவ்வாறு காலையில் திறந்திருந்த பல கடைகளில், சமூக இடைவெளியில்லாமல் அதிகமானோர் கூடி பொருள்களை வாங்க முண்டியடித்தனர். இதன்மூலம் பொதுமக்களுக்கு கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளது.

இவ்வாறு விதிகளை கடைபிடிக்காத கடையின் மீது மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகள் மறு உத்தரவு வரும்வரை திறக்கக்கூடாது என எச்சரித்து சம்பந்தப்பட்ட கடைகளின் வாயில்களில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

இதையும் படிங்க:கரோனா எதிரொலி: தற்காலிகமாக மாற்றப்படும் வில்லிவாக்கம் மார்க்கெட்

ABOUT THE AUTHOR

...view details