தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடுப்பவர்களை தாக்கும் கரோனா!

மதுரை: கரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய சுகாதார பணியாளர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா சிறப்பு மருத்துவமனை
கரோனா சிறப்பு மருத்துவமனை

By

Published : Apr 15, 2020, 2:52 PM IST

மதுரையில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனை ஒன்று செயல்பட்டுவருகிறது. அம்மாவட்டத்தில், மேலும் இரண்டு நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், கரோனா வைரஸ் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய சுகாதார ஒப்பந்த பணியாளர் ஒருவர்.

பணியில் இருந்தபோது கவனக்குறைவாக செயல்பட்டதன் காரணமாகவே இந்த தொற்று அவருக்கு பரவியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபரின் மனைவி மற்றும் குழந்தையை கண்காணிப்பு பட்டியலுக்குள் மருத்துவத் துறையினர் தற்போது கொண்டு வந்துள்ளனர்.

மதுரை கரோனா சிறப்பு மருத்துவமனை

மருத்துவமனை பணியாளர் ஒருவருக்கு, கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அங்கு பணிபுரிபவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பார்க்க: ஒன்று சேர்ந்து கரோனாவை விரட்டுவோம் - மழலைகள் சொல்வதைக் கேளுங்கள் மக்களே!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details