மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, கரோனா தொற்று உறுதியானது. அவரை இராசாசி மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிகிச்சை பிரிவில் அனுமதித்து தனிமைப்படுத்தியுள்ளனர்.
மதுரை கரோனா நபரின் தகவல்கள் சமூக வலைதளங்களில் லீக் - அரசு அலுவலர்கள் அலட்சியமா? - madurai corona virus infected person
மதுரை: கரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப விவரங்கள் முழுவதும் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த நபரின் பெயர், முகவரி, குடும்ப விவரங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து கரோனா வைரஸ் விழிப்புணர்வு மையத்தில் புகார் அளிக்க முயன்றபோது, அங்கு எவ்வித பதிலும் இல்லை என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப விவரங்கள் பொதுவெளியில் வெளியிடுவது சைபர் கிரைம் சட்டப்படி தவறாகும். இந்தத் தகவல்கள் எப்படி வெளியே பரவியது குறித்து அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி ஏழுந்துள்ளது.
இதையும் படிங்க:சினிமா பாணியில் போலீஸ் ஆக்ஷன்; மதுபாட்டில்களுடன் தப்ப முயன்ற கார் பறிமுதல்!