சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மேற்குத் தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக திமுக சார்பில் களமிறங்கும் சின்னம்மாள், தெர்மாகோலுடன் இன்று(மார்ச்.17) தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
தெர்மகோலுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்த திமுக வேட்பாளர் பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர், " இதே தொகுதியில் இரண்டு முறை வென்ற அமைச்சர் செல்லூர் ராஜு, வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மகோல் பிடித்து விஞ்ஞான முயற்சியை மேற்கொண்டார். இதைச் சுட்டிக்காட்டவே இன்று தெர்மாகோலுடன் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளேன். எனது வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. இத்தொகுதி மக்களுக்கு என்னால் முயன்ற பணிகளைக் கண்டிப்பாக மேற்கொள்வேன்" என்றார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன்