உணவு பொருள் வியாபாரியான சக்கரவர்த்தி என்பவர் கடந்த 29.11.2019ஆம் தேதியன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் தனது இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4,47,500-ஐ தவற விட்டுவிட்டார்.
இது தொடர்பாக சி.சி.டி. வி. பதிவுகளை சேகரித்து சக்கரவர்த்தி சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். தெப்பக்குளம் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். பின்னர் அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.