தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது அருந்தியவரை தட்டிக் கேட்டதால் கத்திகுத்து - கல்லூரி மாணவர் கைது - Attempt to murder Madurai College student

மதுரை: உசிலம்பட்டி அருகே மது அருந்திக் கொண்டிருந்த கல்லூரி மாணவரை தட்டிக் கேட்டவரின் மனைவி, மகளை கத்தியால் குத்திய கல்லூரி மாணவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மது அருந்தியவரை தட்டிக் கேட்டதால் கத்திகுத்து மதுரை கல்லூரி மாணவர் கொலை முயற்சி மதுரை கல்லூரி மாணவர் கொலை முயற்சி வழக்கில் கைது Madurai screaming as he tapped the alcoholic Attempt to murder Madurai College student Madurai college student arrested for attempted murder
Madurai screaming as he tapped the alcoholic

By

Published : Jan 20, 2020, 9:58 PM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கொக்குடையான்பட்டியைச் சேர்ந்தவர் முனிப்பாண்டி. இவர் அரசுப் பேருந்து ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு முனிப்பாண்டி வீட்டின் அருகே அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மதன்குமார், அவரது நண்பர்கள் மதுஅருந்தி கொண்டிருந்துள்ளனர். இதைக் கண்ட முனிப்பாண்டி அதைத் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மதன்குமார் இன்று முனிப்பாண்டி வீட்டிற்குச் சென்று அவரை கத்தியால் குத்த முயன்றபோது அவரது மனைவி கலா, அவரது மகள் ஆனந்தசுவேதா ஆகியோர் நடுவில் புகுந்து தடுத்தனர். அப்போது , அவர்கள் இருவரையும் மதன்குமார் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. அதில், படுகாயமடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கலா, ஆனந்தசுவேதா

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உசிலம்பட்டி காவல் துறையினர் மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மது அருந்தியதை தட்டிக் கேட்டவரின் மனைவி, மகளை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

குழந்தைக்கு பாலியல் தொல்லை: முதியவர் மீது பாய்ந்தது போக்சோ!

ABOUT THE AUTHOR

...view details