மதுரை மாவட்டத்தின் 216ஆவது ஆட்சியராக மருத்துவர் அனீஷ் சேகர் இன்று (மே.19) பொறுப்பேற்றுக் கொண்டார். மருத்துவரான இவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் ஆணையராக இவர் பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தமிழ்நாடு நிதி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள பழனிவேல் தியாகராஜன், “மதுரை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு என்னை சந்தித்த மருத்துவர் அனீஷ் சேகர் ஐஏஎஸ் அவர்களை, அவரது பணி சிறக்க வாழ்த்தினேன்.
பேரிடர் காலத்தில் மதுரை ஆட்சியரும் கண்காணிப்பு அலுவலரும், மருத்துவர்களாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் இதையும் படிங்க:என்னை சந்திக்க வேண்டாம் : பழனிவேல் தியாகராஜன்