தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2022, 6:17 PM IST

ETV Bharat / state

மதுரையில் மெட்ரோ திட்டம் - மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்

மதுரையில் மெட்ரோ திட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தனியார் நிறுவனம் மூலமாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மெட்ரோ திட்டம்
மதுரையில் மெட்ரோ திட்டம்

மதுரை:தமிழ்நாடு அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அனீஷ் சேகர் வழங்கினார். அதில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், செல்போன் மற்றும் கடனுதவி, நிதியுதவி ஆகியவை வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "கலைஞர் நூலகம் ஐந்து தளங்கள் கட்டப்பட்டு 6ஆம் தளப்பபணிகள் நடைபெறுகின்றன. மாவட்டத்தில் 5ஆயிரத்து 523 இ - பட்டா வழங்கப்பட்டது. 538 இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன. மக்களுக்குத் தேவையான அனைத்து சான்றுகளும் வழங்கப்பட்டன. 3 லட்சத்து 16ஆயிரத்து 563 பேருக்கு 15 நாள்களில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டவுள்ளன.

மேலும், 44ஆயிரத்து 254 குடும்ப அட்டைகள் ஒராண்டில் வழங்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுக்குள் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் சொந்தக் கட்டடம் கட்டப்படும். நிலத்தடி நீரை சேமிக்க ஆயிரத்து 800 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

2ஆயிரத்து 630 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தொற்று நோயை கண்டறிய 316 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி 13 லட்சத்து 20 ஆயிரம் பேரை பரிசோதனை செய்ததில் 2 லட்சம் பேருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களின் வீட்டிற்கே சென்று மருத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 100 கோடியே 50 லட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 28 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முதல் தவனை தடுப்பூசி 85.9 விழுக்காடு பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் இரண்டாம் தவனை தடுப்பூசி 61.5 விழுக்காடு பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். 2ஆயிரத்து 908 பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

கோரிப்பாளையம் பாலத்திற்கு விரைவில் டெண்டர் விடப்படும், அப்போலோ மருத்துவமனை சந்திப்பு மேம்பாலம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. பெரியார் - யானைக்கல் சந்திப்பு மேம்பாலம் கட்ட நில எடுப்பு பணிகள் நடைபெறுகின்றன. மதுரையில் மெட்ரோ திட்டம் கொண்டுவர சாத்தியக்கூறு ஆய்வுகள் தனியார் நிறுவனம் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் சிறிய வகை பேருந்துகள் அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details