மதுரை மாநகர காவல் துறை, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் பல்வேறு வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் மதுரையில் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 9 ஆயிரத்து 789 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் சுமார் ரூ.3.5 கோடி அபராதம் வசூல் - மதுரை காவல் துறை அதிரடி - மூன்று கோடி அபராதம் வசூல்
மதுரை: 2019ஆம் ஆண்டில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடமிருந்து மதுரை மாநகர காவல் துறை சார்பில் சுமார் ரூ. 3.5 கோடி அபராத தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது.

madurai city police
பொதுமக்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தாகச் சாலையில் வாகனம் ஓட்டிய நபர்களிடமிருந்து மதுரை மாநகர காவல் துறை மூன்று கோடியே 59 லட்சத்து 51 ஆயிரத்து 900 ரூபாயை அபராதமாகப் பெற்றுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பதியப்பட்ட இவ்வழக்குகளின் கீழ் பெறப்பட்ட அபராத தொகை முழுவதையும் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.