மதுரை மாவட்டம் புறநகர் சாலை அருகேயுள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் ஜெயராணி (30). இவர் நேரு நகர் பகுதியில் உள்ள சாலையில் தனது இரண்டு குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஜெயராணியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்திக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தனர்.