தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணிடம் செயின் பறிப்பு முயற்சி: லாவகமாக தப்பிய சிசிடிவி காட்சி வெளியீடு! - Madurai Chain Theft

மதுரை: செயின் பறிக்க முயன்ற இளைஞனிடம் இருந்து லாவகமாக தப்பிய பெண்ணின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Madurai Chain Snatching CCTV
Madurai Chain Snatching CCTV

By

Published : Jan 1, 2020, 4:33 AM IST

மதுரை மாவட்டம், பாஸ்டின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்குலின். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, தன்னுடைய பேத்தியுடன் வீட்டின் அருகேயுள்ள கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், ஜாக்குலின் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்கச் செயினை பறிக்க முயன்றுள்ளார். அதை சுதாரித்துக் கொண்ட ஜாக்குலின் சாதுர்யமாக அந்தத் திருடனின் கையைத் தட்டிவிட்டு சத்தம் போட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கொள்ளையன் தப்பியோடியுள்ளான். இதுகுறித்து காவல் துறையினரிடம் ஜாக்குலின் புகார் அளித்தார். அதனடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை அடிப்படையாகக் கொண்டு கரிமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

செயின் பறிப்பு சிசிடிவி காட்சி

அதில், அந்த இளைஞர் அதேப் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பதும்; இவர் மதுபோதையில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் இளைஞரைக் கைது செய்து, இதற்கு முன்பு நடந்த கொள்ளைச் சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு உள்ளதா என விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details