மதுரை பந்தடியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், தெற்குவாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை சைக்களில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பறிக்க முயற்சி செய்தார்.
சிசிடிவி: மதுரை தெற்குவாசல் பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி! - மதுரை செயின் பறிப்பு சிசிடிவி
மதுரை: மதுரை தெற்கு வாசல் அருகே வயதான மூதாட்டியிடம் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் தங்கச்சங்கிலியைப் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ காட்சியில் மூதாட்டியிடம் சைக்கிளில் வந்தவர் செயினைப் பறிக்க முயல்வதும், அதிலிருந்து அவர் தப்பித்து ஓடுவதும் பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தெற்குவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் மாநிலம் முழுவதும் இதுபோன்ற செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாலியல் தொல்லை கொடுத்த கணவர்; அடித்துக் கொன்ற மனைவி!