தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரில் ஏற்பட்ட திடீர் தீ - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கார் உரிமையாளர்! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் கார் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

madurai car fire accident
madurai car fire accident

By

Published : Oct 6, 2020, 12:29 PM IST

மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதியை சேர்ந்த ரகுராமன் என்பவர் தனது சொகுசு காரில் மதுரையிலிருந்து கோயம்புத்தூருக்கு பணி நிமித்தமாக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

மதுரை வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பகுதியில் சென்றபோது காரிலிருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட கார் உரிமையாளர் ரகுராமன் காரை நிறுத்தி கீழே இறங்கினார். அந்த சமயத்தில் காரில் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. பின்னர் ரகுராமன் உடனடியாக தீ விபத்து குறித்து வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு அலுவலர்கள் தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் காரை நிறுத்தி கீழே இறங்கியதால் தீ விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக கார் உரிமையாளர் ரகுராமன் உயிர் தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

கரோனாவால் வேலையின்றி தவித்த கட்டடத் தொழிலாளி தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details