தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

32 கிலோ கஞ்சா பறிமுதல் - ஐந்து பேர் கைது - 32 kg of cannabis seized

மதுரை: 32 கிலோ கஞ்சா கடத்த முயன்ற ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

madurai cannabis seized
madurai cannabis seized

By

Published : Oct 3, 2020, 9:48 AM IST

மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் வாகன தணிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்ய முயன்றனர். அப்போது காரில் இருந்த நான்கு பேர் தப்பியோட முயன்றதும் காவலர்கள் சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தனர்.

பின்னர், காரை சோதனை செய்ததில் காரின் பின் இருக்கையில் 32 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக செல்லூர் பூவிருந்தவல்லி நகரைச் சேர்ந்த ரவி, பெத்தானியாபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார், வருஷநாடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த கண்ணன், தேனி மாவட்டம் கூடலூரரைச் சேர்ந்த பெரிய கருப்பன், முடக்கு சாலை இந்திரா நகரைச் சேர்ந்த பிரவீன் குமார் ஆகிய 5 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:

டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.45 லட்சம் மோசடி: கணக்காளருக்கு வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details