மதுரை மேல பொன்னகரத்தைச் சேர்ந்தவர் சேதுராமன். பிரபல தொழிலதிபரான இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆகஸ்டு எட்டாம் தேதி காலமானார். தனது அன்பு மனைவியின் பிரிவால் வாடிய தொழிலதிபர் சேதுராமன், மனைவியின் 30ஆம் நாளன்று, அவரை போன்று மிக தத்ரூபமாக சிலை ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சிற்பி பிரசன்னா, ஓவியர் மதுரை மருது ஆகியோரைக் கொண்டு பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் என்றும் நிரந்தரமாக இருக்கும் வகையில் 6 x 3 அடி உயரம் உடைய தனது மனைவியின் சிலையை மிக தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
இறந்த மனைவிக்கு சிலை அமைத்த மதுரை தொழிலதிபர்...! - இறந்த மனைவிக்கு சிலை அமைத்த கணவர்
மதுரை: இறந்த தனது மனைவியின் முப்பதாவது நாளை முன்னிட்டு அவரது சிலையை மிக தத்ரூபமாக மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
இறந்த மனைவிக்கு சிலை அமைத்த மதுரை தொழிலதிபர்
மேலும் மனைவியின் 30ஆம் நாளை ஒட்டி தத்ரூபமாக வடிக்கப்பட்ட மனைவியின் சிலையை வைத்து வழிபாடு செய்தார். இவர் மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ மருத்துவர் சரவணனின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...போதைப்பொருள் வர்த்தகத்தின் சந்தையான கன்னட சினிமா உலகம் - அதிர்ச்சி தகவல்!