கல்வி உரிமைக்கான சைக்கிள் பேரணி - டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - Cycle Rally
மதுரை: கன்னியாகுமரி முதல் சென்னை வரை கல்வி உரிமை குறித்து சைக்கிள் பயணத்திற்கு அனுமதி கோரிய வழக்கில், டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை கல்வி உரிமை குறித்து சைக்கிள் பயணத்திற்கு அனுமதி கோரி அரியலூரைச் சேர்ந்த மணிரத்தினம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "எனது தங்கையின் இறப்பிற்குப் பின்னர் கல்வி உரிமை, மருத்துவ கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறேன். இந்நிலையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை கல்வி உரிமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடத்த திட்டமிட்டோம். அதன் அடிப்படையில் அனுமதி கோரி கடந்த ஜனவரி 17.ஆம் தேதி அலுவலர்களிடம் மனு அளித்தோம். கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் மனுவை ஜனவரி 30-இல்ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால், அதே நாளன்று பிற அமைப்பினருக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே கன்னியாகுமரி காவல் ஆய்வாளரின் உத்தரவை ரத்து செய்து கல்வி உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சைக்கிள் பரப்புரை பயணத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.