மதுரை:ஆடல், பாடல், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதி கோரலில், மனுதாரர் அளிக்கும் மனுவின் அடிப்படையில் 7 நாட்களில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்ற உத்தரவு மதுரைக்கிளை நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இனி புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (ஜூன் 1), வழக்கறிஞர்கள் ஆடல், பாடல் அனுமதி குறித்து புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்கக் கோரினர். அப்போது ஆடல், பாடல் நிகழ்வு குறித்த புதிய மனுக்களை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை என்றும், ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த காவல் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அப்போது நீதிபதிகள், ‘ஆடல், பாடல் குறித்து கடந்த வாரம் விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரமேஷ், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு மிகத் தெளிவான உத்தரவாக உள்ளது. எனவே புதிய உத்தரவுக்கு எந்த வித அவசியமும் இல்லை’ என தெரிவித்தனர்.
இதையும் படிங்க:Anna University: பிஇ, பிடெக் படிப்பு 2ஆம் ஆண்டில் நேரடியாக சேர விண்ணப்பிக்கலாம்