மதுரை:பொது நல வழக்குகளை, மனுதாரர்கள் விளம்பரத்திற்காக தாக்கல் செய்யக் கூடாது என்றும், போதிய ஆவணங்கள் இல்லாமல் பொதுவான பல கோரிக்கைகளை முன் வைத்து பொது நல வழக்கு தாக்கல் செய்யக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரவேல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், “நெல்லை மாவட்டம் களக்காடு நவநீதகிருஷ்ணன் கோயில் தெப்பக்குளம், ராமலட்சுமி மருத்துவமனை எதிரில், சேரன்மகாதேவி மற்றும் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் முதல் கன்னடியன் கால்வாய் பாலம் வரை மற்றும் அம்பாசமுத்திரம் வளைவு முதல் அம்பாசமுத்திரம் ரயில்வே கேட் வரை போன்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என குறிப்பிட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - மத்திய அரசு வாதம்!