மதுரை:தஞ்சாவூர் அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்து அரியலூரைச் சேர்ந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரி மாணவியின் தந்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.