மதுரை: திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த முகமது முஸ்தபா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “திருச்சி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் மருத்துவ சேவை பெறுவதற்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, தற்போது வரை மணப்பாறை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைகளுக்கு மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருவானைக்கால், விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை சார்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் அரசு மருத்துவமனை கட்டுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மருத்துவமனை கட்டிடம், அதிகாரிகளின் தவறான ஆலோசனை காரணமாக நகருக்கு வெளியே வெகு தொலைவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைக்காக வெகு தூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.