மதுரை: விருதுநகர் மாவட்டம், கலசலிங்கம் கல்வியியல் கல்லூரியில் 2021-2022ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடத்தவும், கல்லூரி மாணவர்கள் 2021- 2022ஆம் ஆண்டிற்கான முதல் மற்றும் 2ஆம் பருவத்தேர்வு எழுத அனுமதி வழங்க தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, கல்லூரி சார்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அங்கீகாரம் பெறாமல் கல்வியியல் கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பருவத் தேர்வில் ஒரு பருவத் தேர்வு கூட எழுதவில்லை. இதனால் கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், நூறு மாணவர்களையும் வேறு கல்லூரியில் சேர்க்க அரசு பரிசீலிக்க வேண்டும் என 12.4.2023 அன்று உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கல்லூரி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது.