தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க உயர் நீதிமன்றம் பரிந்துரை!

மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகள் மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என விற்பனை நேரத்தை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரைத்துள்ளது.

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க உயர் நீதிமன்றம் பரிந்துரை!
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க உயர் நீதிமன்றம் பரிந்துரை!

By

Published : Jan 6, 2023, 8:44 AM IST

மதுரை: திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும், மதுபான கடைகள் மற்றும் மது அருந்தும் விடுதிகளில் மது குடித்து ஏற்படும் விளைவுகள் சம்பந்தமான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

விலை பட்டியல்கள் தமிழில் அச்சடிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் மற்றும் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “மதுபானம் வாங்க விற்க உபயோகப்படுத்த உரிமம் உள்ளவர்களுக்கு மட்டுமே என விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மதுபான விடுதிகளில் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மது விற்பனை விலைப்பட்டியல் மற்றும் மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகளை குறித்து அனைத்தும் தமிழில் அச்சிட வேண்டும்.

மதுபான கடைகளில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை தமிழ்நாடு அரசு உறுதிபடுத்த வேண்டும். முக்கியமாக மதுபான கடை விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:சிங்கம்புணரி சீரணி அரங்கத்தை இடிக்க இடைக்கால தடை

ABOUT THE AUTHOR

...view details