தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறங்காவலர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பான வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு - அறங்காவலர்

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் அறங்காவலர் விண்ணப்பத்துடன் சொத்து விவர பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ளது.

நீதிமன்றம் கேள்வி
நீதிமன்றம் கேள்வி

By

Published : Nov 11, 2021, 12:48 PM IST

மதுரை: திருநெல்வேலியைச் சேர்ந்த பாலாஜி கிருஷ்ணசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் நியமனத்திற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
எனவே, இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் நபரிடம், அந்த விண்ணப்பத்தோடு அந்த நபரின் சொத்து விவரங்கள், வழக்கு விவரங்கள் குறித்த பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும் அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் மற்றும் பிரமாண பத்திரங்களை சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை ஆணைய இணையதளத்தில் வெளியிடவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறி உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், அறங்காவலர்களுக்கு யார் யார் விண்ணப்பித்து உள்ளனர் என தெரிய வேண்டும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

அறங்காவலர்களுக்கு ஊதியம் ஏதும் கொடுப்பதில்லை. இதுபோன்ற விதி முறைகளால் யாரும் முன்வர மாட்டார்கள். தேர்தலில் பிராமண பத்திரம் தாக்கல் செய்வது போல், இதற்கு தேவையில்லை என தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், "அவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரா வீடு உள்ளதா இது போன்ற விவரங்களை ஏன் விண்ணப்பதாரரிடம் கேட்க வேண்டும்.

அறங்காவலர்கள் பொறுப்பேற்றவுடன் இதுபோன்ற கோரிக்கைகளை முன் வைக்கலாம். ஆனால் தற்போது ஏன் பிராமண பத்திரம் வழங்க வேண்டும் விண்ணப்பத்திலே தேவையான விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளது"என கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தீர்ப்புக்காக ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை மாலை கரையைக் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

ABOUT THE AUTHOR

...view details