மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாட்டில் கொசுக்களால் பரவி வரும் நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இவ்வாறு உயிரிழந்தோருக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும். கொசு ஒழிப்புப் பணிக்காக தற்காலிகப் பணியாளர்களை அரசு ஏற்கனவே நியமித்துள்ளது. ஆனால் தற்காலிகப் பணியாளர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் போதிய அக்கறை செலுத்தவில்லை. மேலும் நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த உத்தரவையும் அரசு பின்பற்றவில்லை. கொசு ஒழிப்புப் புகை சீரான இடைவெளியில் உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால் எந்தவித பலனும் இல்லை.