தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் மதப்பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு; ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன்!

Madurai Bench: முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 7:09 AM IST

மதுரை: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசாமி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த மாதம் 20ஆம் தேதி விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தின்போது, சனாதனத்தை முதல்வரோ, அவரது மகனோ, கருணாநிதியோ ஒன்றும் புடுங்க முடியாது.

அமைச்சர் சேகர்பாபு ஒரு கேடுகெட்ட அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் வேசி மகன், கூத்தாடி என முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், மேலும் துர்கா ஸ்டாலின் ஆகியோரை அருவறுக்கத்தக்க வகையில் பேசியதாகவும், மதப் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நாங்கள் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். தங்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவருக்கும் நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:“அரசியல் காரணங்களுக்காகவே திரித்து பதிவிட்டுள்ளார்” - அமித் மாள்வியா விவகாரத்தில் தமிழக அரசு பதில்!

ABOUT THE AUTHOR

...view details