மதுரை:கன்னியாகுமரியைச் சேர்ந்த பினோய், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் 'தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடக்கும் அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு கிராவல், ஜல்லி கற்கள், எம்.சாண்ட், குவாரி தூசி மற்றும் மணல் சப்ளை செய்யும் ஒப்பந்தம் பெற்றுள்ளோம்.
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்கிறோம். 10 சக்கரத்திற்கு மேல் உள்ள வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்' என கூறியிருந்தனர்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, '10 சக்கரத்திற்கு மேற்பட்ட 700 லாரிகளில் தினமும் கனிமங்கள் கொண்டு செல்லலாம்’ என அனுமதித்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து அரசுத் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.