தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேலூர் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

மேலூர் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 நபர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலூர் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 நபர்களுக்கு நிபந்தனை ஜாமின் -  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மேலூர் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 நபர்களுக்கு நிபந்தனை ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

By

Published : Jun 9, 2023, 1:52 PM IST

மதுரை:மேலூர் அருகே கம்பாளிபட்டியைச் சேர்ந்தவர் மாணவர் வாசுதேவன். இவர் மேலூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவர் வாசுதேவன் கடந்த மார்ச் மாதம் கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, நான்கு இளைஞர்களால் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இதுவரை கொலைக்கான காரணம் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில் தனுஷ், வீரா, சுதர்சன் ஆகியோர் தரப்பில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க:இறந்த கணவரின் உடலை பட்டா நிலத்தில் புதைத்த வழக்கு: முழு அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

அப்போது நீதிபதி இளந்திரையன், ஜாமீன் கோரிய மூன்று இளைஞர்களும் உளுந்தூர்பேட்டையில் தங்கி, உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தினந்தோறும் இரண்டு முறை கையெழுத்து இட வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதித்து, ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும், நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் இவர்கள் மீது புதிய வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முன்னாள் பாஸ்போர்ட் உதவி அதிகாரி மீதான தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details