மதுரை:போதைப்பொருள் கடத்திய வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரிய மனுதாரரின் வழக்கின் மீது அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை ஏற்று, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு 213 கிலோ கஞ்சா கடத்தியதாக குபேந்திரன் மற்றும் அவரது சகோதரர் ரவி உள்பட மேலும் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருக்கும் மனுதாரர் குபேந்திரன், தனக்கு ஜாமீன் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை. காவல்துறையினர் பெய்யான வழக்கில் கைது செய்துள்ளனர், அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.