தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் சித்ரவதை வழக்கு விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - undefined

கன்னியாகுமரியை சேர்ந்த தீபா என்பவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியது தொடர்பாக தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் இதுவரை விசாரணை செய்த அறிக்கையையும், சைபர் கிரைம் விசாரணை அதிகாரி வழக்கு குறித்து நிலை அறிக்கையையும் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

Madurai bench court on sexual harassment
Madurai bench court on sexual harassment

By

Published : Oct 6, 2021, 5:03 AM IST

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தீபா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் ஜெபர்சன் வினிஸ்லால் என்பவர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். ஜெபர்சன் வினிஸ்லால் உடல்நிலை சரியில்லை என கூறி என்னை திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இந்த நிலையில் உணவில் எனக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

இந்த வீடியோவை ஜெபர்சன் வினிஸ்லால் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களுக்கும் பாலியல் ரீதியாக இணங்க என்னை துன்புறுத்தினார். அவரது நண்பர்களும் என்னை வீடியோ பதிவுசெய்து பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.

இந்த நிலையில் மீண்டும் ஜெபர்சன் வினிஸ்லால் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றபோது அதனை தடுத்ததால் என்னை காயப்படுத்தினார். இதனால், தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

இதனை, அடுத்து சில நாட்களில் ஜெபர்சன் வினிஸ்லால் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் ஜெபர்சன் வினிஸ்லால் மனைவி எனது பாலியல் ரீதியான வீடியோக்களை எனது சித்தப்பா, கலிஸ்டர் ஜெபராஜ் மற்றும் பலரிடம் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் ஜெபர்சன் வினிஸ்லால் நண்பர்கள் மற்றும் கலிஸ்டர் ஜெபராஜ் பாலியல் ரீதியான இணங்கும்படி பலமுறை தொந்தரவு செய்தனர் மேலும் எனது மகனை கொன்று விடுவதாகவும் மிரட்டினார். இதனை அடுத்து எனது உறவினர்களின் உதவியுடன் ஆன்லைன் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன்.

ஜெபர்சன் வினிஸ்லால் நண்பர்கள் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் எடுத்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் இந்த வழக்கு சைபர் கிரைம்-க்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் இதுவரை விசாரணை செய்த அறிக்கையையும், சைபர் கிரைம் விசாரணை அதிகாரி வழக்கு குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details