தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் ஆய்வாளர் வசந்தியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கு முடித்து வைப்பு - காவல் ஆய்வாளர் வசந்தியின் குடும்பத்தினருக்கு காவலர்கள் கொலை மிரட்டல்

காவல் ஆய்வாளர் வசந்தியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

காவல் ஆய்வாளர்
காவல் ஆய்வாளர்

By

Published : Nov 12, 2021, 6:47 AM IST

மதுரை:தேனி மாவட்டத்தை சேர்ந்த பவுன் கொடி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகள் வசந்தி நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி மதுரை குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் சில காவலர்கள் உடன் எங்களது வீட்டிற்கு வந்து எனது குடும்பத்தினரை வீட்டுக்கு வெளியே பொது இடத்தில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி உனது மகள் வசந்தி எங்கு உள்ளார் என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கேட்டனர்.

ஆனால் எனது மூத்த மகள் வசந்திக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் தற்போது எவ்வித தொடர்பும் இல்லை. மேலும் வழக்கின் விசாரணைக்காக எனது குடும்பத்தினரை தேனி மற்றும் மதுரைக்கு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைக்காக அழைக்கின்றனர். இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே எனது வீட்டில் அத்துமீறி நுழைந்து பொது இடத்தில் எனது குடும்பத்தினருக்கும், எனக்கும் கொலை மிரட்டல் விடுத்த காவல்துறையினர் மீது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை செய்ய உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று (நவ.11) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "இனி வரும் காலங்களில் வசந்தியின் குடும்பத்தினரை விசாரணைக்காக அவரது வீட்டிற்கு காவல்துறையினர் செல்ல மாட்டார்கள், மேலும் புகார் குறித்து உயர் அலுவலர்கள் விசாரணை செய்து வருகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனுதாரர் தரப்பில். காவல்துறை விசாரணைக்கு எங்கள் குடும்பத்தினர் முழுமையாக ஒத்துழைப்பு தருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: Chennai Rains - குட்டித்தீவு போல் காட்சியளிக்கும் தாம்பரம்

ABOUT THE AUTHOR

...view details