மதுரை : அழகர்கோவில் ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதில் ஆடி பவுர்ணமி அன்று நடைபெறும் ஆடித் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
தென் மாவட்ட மக்களின் குலதெய்வமாக விளங்கும் கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா பத்து நாள்கள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் தென் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம்.
கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஆடித் திருவிழா ரத்து செய்யப்பட்டு அழகர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டும் கரோனா இரண்டாவது அலை காரணமாக ஆடித் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு ஆகம விதிகளின்படி கோயில் வளாகத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
அழகர்கோவில் ஆடித் திருவிழா கொடியேற்றம்!
மதுரை அழகர்கோவில் ஆடித்திருவிழா உற்சவத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை 16) கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் கோயில் பட்டர்களும் நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
அழகர்கோவிலில் ஆடித் திருவிழா கொடியேற்றம்!
அந்தவகையில் நேற்று (ஜூலை16) அழகர் கோயில் வளாகத்தில் ஆடித் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி பக்தர்கள் இல்லாமல் கோயில் பட்டர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் அம்பி பட்டர் தலைமையில் ஆகம விதிகளின்படி கொடி ஏற்றப்பட்டு மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.