தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பச்சைப்பட்டுடுத்தி கள்ளழகர் அழகர்கோவிலில் எழுந்தருளினார்!

மதுரை: ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும் சித்திரைத் திருவிழா கரோனா தொற்றால், பக்தர்களின் கூட்டமின்றி கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளழகர்
கள்ளழகர்

By

Published : May 9, 2020, 8:04 AM IST

உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் கள்ளழகர் எழுந்தருளலில் பல்வேறு நிகழ்வுகள் அனைத்தும் கோயில் வளாகத்திற்குள்ளேயே இன்று சிறப்பாக நடத்தப்பட்டன. சுந்தராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு தங்கக் குதிரை வாகனத்தில் கோயில் பிரகாரத்தில் எழுந்தருளி பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்குவது போல மாதிரி ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் கள்ளழகர் எழுந்தருளுவது போன்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக கள்ளழகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாலை 4.30மணி முதல் 5.30மணி வரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான சுந்தராஜபெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு மோட்சம் அளித்தல், புராணம் வாசித்தல் ஆகிய நிகழ்வுகள் அழகர் கோவில் சுந்தராஜபெருமாள் கோயில் உட்பிரகாராத்தில் நடைபெற்றன. இதனைக் காண பக்தர்களுக்கு அனுமதியில்லாத நிலையில் இந்து அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்த தொலைக்காட்சி மூலமாக நேரலையில் ஒளிபரப்பாகியது.

கோயில் வளாகத்தில் ஊடகங்கள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதியில்லை என்ற நிலையில், தற்போது விதிகளை மீறி பக்தர்கள் சிலர் உள்ளே சென்றதோடு அதனை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"மாமதுரை அன்னவாசலில்" மே 10 முதல் முட்டையுடன் மதிய உணவு - சு.வெங்கடேசன் எம் பி!

ABOUT THE AUTHOR

...view details