மதுரை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை அவனியாபுரத்தில் பல சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த வழக்கில் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து கமிட்டி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில், அனைத்து சமூகத்தைச் சேர்த்தவர்களையும் இணைத்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது.