கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை மதுரை மாநகர காவல்துறை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் தொடர்புடைய நபர்களை அதிரடியாகக் கைது செய்தும் வருகிறது.
இந்நிலையில் மதுரை காளவாசல் சந்திப்பு அருகேயுள்ள வணிக வளாகத்தின் முன்புறம் 17வயது சிறுவன் கஞ்சா விற்பதாகக் கிடைத்த தகவலையடுத்து எஸ்எஸ் காலனி காவல் ஆய்வாளர் திலீபன் அப்பகுதிக்குச் சென்று சிறுவனை கைது செய்தார்.