தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி இன்று நடக்கிறது - alanganallur jallikattu best bull

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியின் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு தலா ஒரு கார் பரிசு வழங்கப்படுகிறது.

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி இன்று நடக்கிறது
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி இன்று நடக்கிறது

By

Published : Jan 17, 2023, 6:30 AM IST

Updated : Jan 17, 2023, 6:52 AM IST

அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன

மதுரை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று ( ஜனவரி 17) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இப்போட்டியில் 1,000 காளைகளை அடக்க 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக போட்டி நடைபெறவுள்ளது. போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பிலும், சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி் ஸ்டாலின் சார்பிலும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு வாடிவாசல்

போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களும் அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்க நாணயம் வழங்கப்படவுள்ளது. இதேபோன்று போட்டியின் போது சிறப்பாக விளையாடக்கூடிய காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பைக், ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி போன்ற பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

போட்டி முழுவதும் சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக பதிவுசெய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பாக மருத்துவபரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படவுள்ளனர். போட்டியின் போது மாடுபிடி வீரர் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் வீரர்களை கண்காணிக்க சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்துகொள்ள போலியான ஆவணங்களை பயன்படுத்தி காளை உரிமையாளரோ, மாடுபிடி வீரர்களோ கலந்துகொண்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

போட்டியில் காளைகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரிய மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகியோர் இணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு பாதுகாப்பு பணிக்காக 2,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.காலை 8 மணிக்கு வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் போட்டி தொடங்கவுள்ளது. முன்னதாக அலங்காநல்லூர் கோயில் காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும்.

இந்த போட்டியை காண்பதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தனி பார்வையாளர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியின்போது சிகிச்சைக்காக 160 மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினரும், 60 கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தீயணைப்பு நிலைய வாகனங்கள், 15 108 ஆம்புலன்ஸ்கள், காளைகளுக்கான ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவமனை வாகனம் தயாராக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பேரூராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிடம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மேற்பார்வையில் போட்டியின் அனைத்து நடவடிக்கைகளும் நடக்கிறது.

இதையும் படிங்க:பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை தாக்கியதில் வீரர் உயிரிழப்பு

Last Updated : Jan 17, 2023, 6:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details