தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலங்காநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு - அலங்காநல்லூர் போலீஸ்

மதுரை: அலங்காநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது மின்னல் வேகத்தில் சென்ற சரக்கு வேன் மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

மின்னல் வேகத்தில் சென்ற சரக்குவேன் மோதி வாலிபர் பலி..
மின்னல் வேகத்தில் சென்ற சரக்குவேன் மோதி வாலிபர் பலி..

By

Published : Jun 2, 2020, 2:18 PM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மணியஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் பிரகாஷ். இவர் மணியஞ்சி கிராமத்திலிருந்து மதுரைக்கு தனது இருசக்கர வாகனத்தில் குலமங்கலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது மின்னல் வேகத்தில் வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்து விரைந்துவந்த அலங்காநல்லூர் காவல் துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தப்பியோடிய சரக்குவேன் உரிமையாளரைக் கைதுசெய்தனர்.

சரக்குவேன் மோதி இளைஞர் உயிரிழப்பு

இறந்த பிரகாஷிற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி தற்போதுதான் 40 நாளே ஆன குழந்தை உள்ளது. அவரது இழப்பு குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்த நபர் கைது

ABOUT THE AUTHOR

...view details