மதுரை: மதுரை விமான நிலையத்தில், கடந்த ஏழு மாதங்களில் 3.31 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல்செய்துள்ளதாக மதுரை விமான நிலைய சுங்கப் புலனாய்வுப் பிரிவு இணை ஆணையர் ஜெய்சன் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், பைஸ் ஜெட், இண்டிகோ உள்ளிட்ட பிற தனியார் விமான நிறுவனங்கள் மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்துவருவதற்காகச் சிறப்பு விமானங்களை இயக்கிவந்தன.
அதனைப் பயன்படுத்தி சிலர் தங்கம் கடத்திவருவதாக உளவுத் துறை, விமான சுங்கப் புலனாய்வுப் பிரிவின் அலுவலர்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, மதுரை விமான நிலையத்தில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதில், வெளிநாடுகளிலிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்செய்யப்பட்டன.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையில், 3.31 கோடி ரூபாய் மதிப்பிலான 6,607.290 கிராம் தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது. இது தொடர்பாக, 12 பெண்கள் உள்பட 26 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நீர்நிலைகளில் ஆகாய தாமரைகள் அகற்றம்: பொதுப்பணித் துறை பதிலளிக்க உத்தரவு