மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விமான நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை ஆட்சியர் அன்பழகன், விமானநிலைய இயக்குநர் செந்தில் வளவன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச விமான நிலையமாக 2010ஆம் ஆண்டு மதுரை விமான நிலையம் அங்கீகரிக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு ஓடுதள விரிவாக்க பணிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கின. இதற்காக 615 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அதில் 555 ஏக்கர் நிலம் பொது மக்களிடமிருந்து கையகப்படுத்த வருவாய் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மதுரை விமான நிலைய ஓடுபாதை பகுதியை ஆய்வு செய்த பின் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது; "நீர் மேலாண்மையில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. இதனை ஜலசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம், குடிமராமத்து திட்டம் போன்ற திட்டங்களை தமிழ்நாட்டில் முதலமைச்சர் செய்து வருகிறார். 83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையில் முதலமைச்சரே நேரடியாக வந்து தண்ணீர் திறந்து வைத்துள்ளார்.
மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள் ஆய்வுக் கூட்டம் அதே சமயம், ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் அமைக்கும் பணியானது தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. நீர் மேலாண்மை பற்றி வரலாற்றில் படித்திருக்கிறோம். ஆனால் புதிய வரலாற்றை படைக்கும் வண்ணம் நீர் மேலாண்மையில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். நீர் மேலாண்மையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக மழைநீர் சேகரிப்பு திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது உள்ள குடிமராமத்து பணியால் வட கிழக்கு, தென் கிழக்கு பருவமழையின் நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும்.
அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணிக்காக 90 விழுக்காடு நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. 1.5 கிலோ மீட்டர் முதல் 2 கி.மீ ஓடுதள விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளன. ஓடுதள விரிவாக்கப் பணிகளில் இடையே திருமங்கலம் சுற்றுச் சாலை அமைந்துள்ளது. இதனால் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் இப்பகுதியில் வாரணாசி விமான நிலையம் போல் பாலம் அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றனர்.
இதையும் படிங்க: மய்யத்தை தாண்டி நிலைபாடு எடுங்கள் ஆண்டவரே... #HBDKamalHaasan66