தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் - கருணாஸ் - Actor Karunas Press Meet

மதுரை: ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது மாணவர்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை உருவாக்கும் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் கருணாஸ் பத்திரிக்கை சந்திப்பு நடிகர் கருணாஸ் செய்தியாளர் சந்திப்பு மதுரை விமான நிலையம் நடிகர் கருணாஸ் செய்தியாளர் சந்திப்பு Actor Karunas Press Meet Madurai Airport Karunas Press Meet
Actor Karunas Press Meet

By

Published : Jan 27, 2020, 11:49 PM IST

Updated : Jan 28, 2020, 9:57 AM IST

மதுரை விமான நிலையத்திற்கு நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் வருகைதந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் துறை பொதுத்தேர்வு அறிவித்திருப்பது என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கக் கூடியதாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மாணவர்களுக்கு ஏற்படும் இந்த மன அழுத்தமானது அவர்களது எதிர்காலத்தின் மீது பெரும் கேள்விக்குறியாக அமையும் என்பதனால் இதனை மனத்தில் வைத்துக்கொண்டு மாநில அரசு நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

நடிகர் கருணாஸ் செய்தியாளர் சந்திப்பு
Last Updated : Jan 28, 2020, 9:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details