இரண்டு மருத்துவக் கல்லூரிகளின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மதுரை வந்துள்ளார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “சிறந்த ஆளுமைமிக்க பிரதமராக நரேந்திர மோடி இந்தியாவை வழிநடத்துகிறார். இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி 100 நாள்களிலேயே, 75 மருத்துவக்கல்லூரி கட்டுமானத்திற்கு அனுமதியையும் அவர் வழங்கியுள்ளார்.
இந்தியாவில் பிறந்து கடைக்கோடி குடிமகனுக்கும் சிறந்த மருத்துவம் வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறார். அதன் ஒருபகுதியாக, பிரதமர் தமிழ்நாட்டில் மட்டும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை வழங்கியுள்ளார். அதற்கான முதல் தவணையாக நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது. 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இடம்பெற உள்ளதற்கு, எனது வாழ்த்துக்களை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.