மதுரை: தோப்பூர் அருகே மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு வகையில் போராட்டங்கள், ஆதரவுக் குரல்கள் எழுந்து வந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை, மதுரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்த பதிலில், “திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு ரூ.1977.8 கோடி ஆகும். இதில் ஜப்பான் நிறுவனமான ஜைகாவே 82 விழுக்காடு நிதியை வழங்குகிறது.