தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அலுவலக கட்டுமானப்பணிகள் தொடக்கம் - aiims madurai current status

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காக மத்திய பொதுப் பணித்துறை ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்த நிலையில் அலுவலக கட்டுமான பணிகள் தொடங்கின.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அலுவலக கட்டுமானப்பணிகள் தொடக்கம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அலுவலக கட்டுமானப்பணிகள் தொடக்கம்

By

Published : Jan 14, 2023, 9:10 AM IST

மதுரை தோப்பூர் பகுதியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான திட்ட அலுவலக கட்டுமான பணிகளுக்காக மத்திய பொதுப்பணித்துறை ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தநிலையில், இன்று (ஜனவரி 14) அலுவலக கட்டுமான பணிகள் தொடங்கின. மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்

இதற்கு நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து முதற்கட்ட பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே மத்திய அரசு வரும் 2026ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நிறைவடையும் என்று அறிவித்திருந்தது.

ஆனாலும், பணிகள் எப்போது தொடங்கப்படவில்லை. இதனால் எப்போது கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசின் பொதுப்பணித்துறை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான திட்ட அலுவலகம் அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்

அதன் அடிப்படையில் எய்ம்ஸ் அமைய உள்ள பகுதியில் திட்ட அலுவலகத்திற்கான கட்டடம் அமைக்க ஏதுவாக இல்லாத நிலையில் அதன் அருகே உள்ள தோப்பூர் காசநோய் மருத்துவமனை அருகே உள்ள பழைய கட்டிடம் ஒன்றை சீரமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தது. இந்த சீரமைப்பு பணிகளுக்காக 2 கோடியே 16 லட்சத்து 72 ஆயிரத்து 487 ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கட்டுமான பணிகளுக்காக 1 கோடியே 57 லட்சத்து 1 ஆயிரத்து 115 ரூபாயும், மின் இணைப்பு பணிகளுக்காக 59 லட்சத்து 71 ஆயிரத்து 372 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்ட அலுவலகத்திற்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்கியுள்ளன. மேற்கண்ட சீரமைப்பு பணிகள் அனைத்தும் 180 நாட்களுக்குள் நிறைவேறும் என மத்திய பொதுப்பணி துறையின் ஒப்பந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் தற்போது மத்திய பொதுப்பணித் துறை அறிவிப்பின் வாயிலாக அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி, அதன் திட்ட மதிப்பீடு ரூ.1977.8 கோடி எனவும் இதில் ஜப்பான் நிறுவனமான ஜைகா 82 விழுக்காடு நிதியை வழங்குகிறது. அதாவது, ரூ.1621.8 கோடியும், மீதமுள்ள 18 சதவிகித நிதியை மத்திய அரசும் வழங்க உள்ளது. இதன் மூலம் மதுரை மக்களின் நீண்டகால் கோரிக்கை நிறைவேறுவதற்கான முதல் பணி இன்று தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க:காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details