தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண்மைக் கல்லூரியில் ரூ.19.37 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் - முதலமைச்சர் திறந்து வைப்பு! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரை: மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விரிவுரை அரங்கம், இணையதள மையத்தின் இரண்டாம் தள விரிவாக்கம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

madurai-agricultural-college

By

Published : Sep 19, 2019, 5:47 PM IST

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்படும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விரிவுரை அரங்கம், தேர்வு அறைகள், நூலகம் இரண்டாம் தளம் விரிவாக்கம், உயிர்ம கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் இரண்டாம் தளம் விரிவாக்கம் மற்றும் இணையதள மையத்தின் இரண்டாம் தளம் விரிவாக்கம் உள்ளிட்டவை சுமார் ரூ.19 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள நபார்டு வங்கியின் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மதுரை வேளாண்மைக் கல்லூரி புதிய கட்டடம்

இதில் விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறைகள் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் இக்கல்லூரியில் பயிலும் சுமார் 750 மாணவ-மாணவிகள் பயன்பெறவுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details