மதுரை மீனாட்சியம்மன் தெற்கு கோபுரத்தின் அருகேயுள்ள ஆயிர வைசிய அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் நுழைவாயிலில் உள்ள பால்கனி இடிந்து விழுந்ததில் 11, 12ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் சக்திவேல், குமரவேல், வீரகுமார் ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
மீனாட்சியம்மன் கோயில் அருகே விபத்து: 3 பேர் படுகாயம் - policemadurai
மதுரை: மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் மூவரும் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பழமையான கட்டடம் என்பதால் ஏற்கனவே பலமுறை பொதுமக்கள் இது குறித்து புகார் அளித்திருந்த நிலையில், அரசின் அலட்சியம் காரணமாக இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சேதமடைந்த பகுதிகளில் தீயணைப்பு துறையினர் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். சம்பவம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற பழமையான கட்டடங்களில் செயல்படும் சிரத்தன்மை குறித்து அரசு ஆய்வு மேற்கொண்ட பின்னரே பள்ளிகள் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.