தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை! - மதுரை

மதுரை: அதிவேகமாக வந்த சிற்றுந்து மோதி மகன் கண்முன்னே தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை

By

Published : Jul 25, 2019, 3:07 PM IST

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (45) மற்றும் அவருடைய மகன் லோகேஷ்(17) ஆகிய இருவரும், மதுரைக் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேகத்தில் எதிரே வந்த தனியார் சிற்றுந்து மோதி விபத்துக்குள்ளாகினர்.

இதில் சம்பவ இடத்திலேயே விஜயலட்சுமி பலியானார். காயமடைந்த மகன் லோகேஷ் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகன் கண்முன்னே தாய் மரணம்!

மேலும் விபத்து நடந்ததும் உடனடியாக வரவேண்டிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் தாமதமாக வந்ததும் விஜயலட்சுமி மரணமடைந்ததற்கு ஒரு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details