மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). இவர் தனது மகளோடு அதே பகுதியில் கடந்த பத்தாண்டுகளாக வசித்துவருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாளின் மகள் சாலை விபத்தில் உயிரிழந்தார். மகளின் இறப்பிற்குப் பின்பு ஆதரவு கொடுப்பார் யாருமின்றி வள்ளியம்மாள் வறுமையில் வாடினார்.
வள்ளியம்மாளைப் பராமரித்துப் பாதுகாப்பதற்கு உறவினர்கள் யாரும் முன்வராத நிலையில், ஜெய்ஹிந்துபுரத்தின் பல்வேறு பகுதிகளின் சாலையோரங்களில் மாதக்கணக்கில் வள்ளியம்மாள் இருந்துவந்துள்ளார். தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக தங்குவதற்கு இடமின்றி பெரும் சிரமத்துக்கு ஆளாகினார்.