தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் பொங்கல் பை திட்டத்தில் 100 மி.லி. நெய் பாட்டில் - மதுரை ஆவின் அறிவிப்பு - madurai aavin department

தமிழ்நாடு அரசின் பொங்கல் பை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 100 மி.லி. நெய் பாட்டில் வழங்கப்பட உள்ளது என மதுரை ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

100 ml ghee with tamilnadu govt pongal bag scheme
தமிழ்நாடு அரசின் பொங்கல் பை திட்டத்தில் 100 மி.லி. நெய் பாட்டில் - மதுரை ஆவின் அறிவிப்பு

By

Published : Dec 14, 2020, 8:37 PM IST

மதுரை:தமிழ்நாடு அரசின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், மதுரை ஆவின் சார்பாக மதுரை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தாண்டு 100 மி.லி அளவிலான நெய் பாட்டில்கள் வழங்கப்படவுள்ளன.

தற்போதுவரை 90 ஆயிரம் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஆவின் நிர்வாகம், எஞ்சிய 1 லட்சத்து 62 ஆயிரம் பாட்டில்கள் தயாரிக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இரவு பகலாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு 500 கிராம் பால் பவுடர் வழங்க தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த ஒருவாரத்தில் சுமார் 19 மெட்ரிக் டன் பால் பவுடர், 500 கிராம் பாக்கெட்டுகளாகத் தயார் செய்யப்பட்டு புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்துக் கொடுத்தால் சன்மானம் - பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டிகள்

ABOUT THE AUTHOR

...view details