தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை ஆதீனத்தின் உடல் நல்லடக்கம் - funerals

உடல்நலக் குறைவால் காலமான மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

மதுரை ஆதீனத்தின் உடல் நல்லடக்கம்
மதுரை ஆதீனத்தின் உடல் நல்லடக்கம்

By

Published : Aug 14, 2021, 10:53 PM IST

மதுரை: மதுரை ஆதீனத்தின் 292ஆவது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் நேற்று (ஆக.13) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக நேற்று நள்ளிரவிலிருந்து வைக்கப்பட்டது.

இன்று (ஆக.14) காலை மதுரை ஆதீனத்தின் 293ஆவது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனத்திற்கான ஆச்சார்யா அபிஷேகத்தினை தருமபுர ஆதீனம் முன்நின்று நடத்தி வைத்து தீட்ஷையும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அரசு சார்பில் அஞ்சலி

இதனைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அமமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், இந்து மக்கள் கட்சி தலைவர், இந்து முன்னணி, மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள், எஸ்டிபிஐ, மனித நேய மக்கள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மதுரை ஆதீனத்தின் உடல் நல்லடக்கம்

திருவாவடுதுறை ஆதினம், கோவை காமாட்சிபுரி ஆதீனம், தருமபுர ஆதீனம், குன்றக்குடி அடிகளார், கேரளா மாநில ஹிந்து ஆச்சார்ய சபையின் சௌபர்னிகா விஜயேந்திர பூரி சுவாமிகள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

4 வீதிகளில் ஊர்வலம்

அதன்பிறகு ஆதீனத்தின் உடலுக்கு மீனாட்சியம்மன் கோயில் சார்பில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான நான்கு கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

ஆதீன மடத்தில் இருந்து அவரது உடல் பூப்பல்லக்கில அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டு திருவாவடுதுறை ஆதீனம், கோவை காமாட்சிபுரி ஆதீனம், தருமபுர ஆதீனம், குன்றக்குடி அடிகளார் ஊர்வலமாக வந்தவாறு உடல் எடுத்துச்செல்லப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளை வலம் வந்து, காமராஜர் சாலை வழியாக முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதீனத்துக்கு சொந்தமான இடத்திற்கு உடல் கொண்டுவரப்பட்டது.

உடல் நல்லடக்கம்

தருமபுர ஆதீனம், திருச்சி ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், குன்னக்குடி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் பல்வேறு அபிஷேக சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு பின்னர் அமர்ந்த நிலையிலேயே உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: எம்மதமும் சம்மதம்- அருணகிரி நாதர் மாஸ் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details